×

10 வயதில் ஆங்கில புத்தகம் எழுதி அசத்திய சிறுமி: கின்னசுக்கு விண்ணப்பம்

தஞ்சாவூர்: ஆங்கிலத்தில் 12 நீதிக்கதைகள் அடங்கிய தொகுப்பை புத்தகமாக எழுதி அசத்திய 10வயது சிறுமி கின்னசுக்கு விண்ணப்பித்துள்ளார். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை எல்ஐசி காலனியை சேர்ந்த ராமகிருஷ்ணன்-ரேவதி தம்பதியின் மகள் இனியா(10). 5ம் வகுப்பு படித்து வருகிறார். குழந்தை பருவத்திலிருந்தே கதை கேட்பதில் ஆர்வமாக இருந்துள்ளார். தொடர்ந்து பள்ளியில் படிக்கும்போது ஆங்கில நீதிக்கதைகளில் இனியா ஆர்வமாக இருப்பதை அறிந்த தாய் ரேவதி, இனியாவிடம் தோன்றிய கதைகளை எழுது, நன்றாக வந்தால் புத்தகமாக போடலாம் என ஊக்கப்படுத்தியுள்ளார்.

இதையடுத்து சில மாதங்களிலேயே 12 நீதிக்கதைகளை ஆங்கிலத்தில் எழுதி அந்தந்த கதைகளுக்கான ஓவியங்களையும் இனியாவே வரைந்துள்ளார். நீதிக்கதைகள் நன்றாக வந்ததால் இனியாவின் பெற்றோர் ‘இனியாவின் சிறுகதைகள்’ எனும் தலைப்பில் 12 நீதிக்கதைகளை கொண்ட 24 பக்க ஆங்கில புத்தகத்தை உருவாக்கியுள்ளனர். மேலும் இனியா பல்வேறு கதை எழுதும் போட்டிகளில் பங்கேற்று பரிசு, பதக்கம் வென்றுள்ளார். இதை கின்னஸ் சாதனைக்காக சிறுமியின் பெற்றோர் விண்ணப்பித்துள்ளதாக கூறினர்.

The post 10 வயதில் ஆங்கில புத்தகம் எழுதி அசத்திய சிறுமி: கின்னசுக்கு விண்ணப்பம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Iniya ,Ramakrishnan-Revathy ,Thanjavur Medical College Road ,LIC Colony ,
× RELATED 12 ஆங்கில நீதிக்கதைகள் அடங்கிய...